வியாழன் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

பெண்ணின் பெருமை
—————-
பெண்ணின் விடுதலைக்காய்
பேரொலி எழுப்பினர்
பாரதியோ பாட்டாலே
புதுமைப்பெண் படைத்தான்
பெண்கள் இல்லாதுலகிலே
ஆண்களினாலே என்னபயன்
அதுதான் ஆதாமைப்படைத்த
இறைவன் ஏவாளைப்படைத்தான்
பெண்கள் அடுப்பங்கரை
ஆண்டது போதுமென்று
இப்போ அகிலத்தையே
ஆளுகிற நிலைமை
மண்ணிலே மட்டுமல்ல
விண்ணிலும் பறக்கின்றாள்
பெரிய பதவிகளும்
பெண்ணும் வகிக்கின்றாள்
ஆண்களைவிட அதிகம்
படித்து பட்டம்பெறுகின்றாள்
குடும்பம் சுற்றம்
சூழல் தழுவுகின்றாள்
அறிவிய்லிலும் ஆரணங்கு
ஆற்றல் படைக்கின்றாள்
பெண்ணின் பெருமை
சொல்லி மாளாது
பெண்ணே மண்ணை
மதித்து வாழ்வில்
பெண்ணினத்திற்கு மேன்மேலும்
மெருகு ஊட்டுவாயா
பெண்ணிற்றகு அது
பெருமை சேர்க்கட்டும்!