சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும்சந்திப்பு
தலைப்பு
பகலவன்
————-
பகலில் வருபவன் பகலவன்
பகலைத் தருபவன் பகலவன்
காலையில் கிழக்கில் உதிப்பான்
மாலையில் மேற்கே மறைவான்
பகலவன் ஒளிபரப்ப வில்லையெனில்
விவசாயி நெல்விதைக்க முடியாதே
நெல்விதைக்கா விடில் அரிசியில்லையே
அரிசியில்லையெனில் சோறு கிடையாதே
பகலவன் வருகையால் பாரேமகிழும்
பகலில் மக்கள் சுறுசுறுப்பாவார்கள்
பகலில் திருடர் பயமில்லை
இரவில் தூக்கம்தான் வரும்
காலையில் இரைதேடும் பறவைகள்
பகலவன் மறைய கூடுவரும்
காலையில் மேய்ச்சலுக்கு செல்லும்
மந்தைகள் மாலையில் இருப்பிடம்சேரும்
பகலின்றி இரவில்லை இரவின்றி பகலில்லை
இயற்கையின் நியதி இதுவென்று
இறைவன் வகுத்த வழிஎன்றே!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி