வியாழன் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

காற்றின் மொழியாகி வாழ்வு தந்தாய்
——————————
புலப்பெயர்வில் புதுப்புது சோகம்
புரியமுடியா பலப்பல மாற்றம்
எங்கும் எதிலும் வேற்று மொழி
எங்கே எம் இனிய தமிழ் எனத்தேடுகையில்
காற்றின் மொழியாகி வானலையில் தமிழ்
காதிலே கேட்டதும் கனிந்தது மனம்
வீட்டுக்குள் இருக்கும் நமக்கு உற்றநட்பாய்
ஓயாது ஒலித்து உயிர்ப்பித்த வரம் தந்தாய்
மனக்குழப்பம் மாற்று எண்ணம்
தனித்திங்கே வாழும்போது
எங்கிருந்தோ கேட்ட ஒலி
தட்டி எழுப்பி தைரியம் தந்தது
எழுத த்தூண்டிது உணர்வு விழித்தது
ஓவியமாக இருந்த நிலைமை
காவியமாக வரைவதற்கு வந்தெம்மிடம்
காற்றின் மொழியாகி வாழ்வு தந்தாய்