வியாழன் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

இன்று இங்கே பெண்களுக்கு
விடுமுறை
————-
கவலையின்றி களிப்புடன்
ஆட்டமும் பாட்டமும்
அடுக்களை வேலையில்லை
அவிக்கவும் தேவையில்லை
பிள்ளைகள் தொல்லையில்லை
பொறுப் பெடுப்பார் அப்பாக்களே
பதினெட்டு வயதுக்கு மேல்
வெளியில் செல்லலாம்
இரவுவரை மகிழ்வுடன்
கொண்டாடலாம்
இன்று இங்கு பெண்களுக்கு விடுமுறை
சிறுவர் சிறுமியர் பாடசாலையில்
கொண்டாட்டம்
பள்ளி மாணவர் பள்ளியிலும்
வெளியில் பகலிலும் கொண்டாடலாம்
இனிப்புவகை தாராளம்
இடையிடையே ஊர்வலம்
வாழ்க்கையை அனுபவிக்க
பிறந்தவர் அனுபவிக்கிறார்
அன்றாடம் உழைப்பவரும் கூட
நம்மவரோ ஓடிஓடி உழைத்து
சேர்க்கின்றோம் எதற்கு
விளங்காத வாழ்வில்
விரயமாகும் காலம்
விளக்கம் வருகையில்
விரைந்து வருவான் காலன்
இதுதான் மனித வாழ்வின் நியதி
இதைஉணர்ந்தோர்
வாழ்வை மெச்சி வாழ்ந்திடுவார்
ம்மகிழ்வுடன் வாழுங்கள்
கொண்டு போவது எதுவுமில்லை
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
7..2.24

பின். கு.
இன்று இங்கே
Weiber fest
என்றால் பெண்களுக்கான
என்ஜாய் பண்ணும் நாள்
ஆனால் எல்லா மாநிலத்திலும் இல்லை
குறிப்பிட்ட மாநிலத்தில் தான்