சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
வசந்தத்தில் ஓர்நாள்
—————
வசந்தம் வாழ்க்கையில்
இளமையிலொன்று இல்லறத்திலொன்று
சந்தம் தொடரும் சங்கிலியாக
உறவினில் உற்சாகமாய் இருக்கையில்
பெருமிதம் கொண்டங்கு
கற்றதே பலபாடம் கண்குளிர
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
போற்றிடும் அவர் வளர்ப்பு
பூமியில் மெச்சும் அளவு
சாற்றிடும் ஊருமதை நன்றே
தாளாத தண்மை கொண்டு
பூரண நிலவு முற்றத்திலே
பூக்களின் நறுமணம் சிந்துகையிலே
நாற்காலி போட்டு நாமெல்லாம்
நனிமிகு மகிழ்வில் அன்று
வசந்தத்தில் ஒரு நாள் அது
வருமா மீண்டுமது
கெங்கா ஸ்ரான்லி நன்றியுடன்