சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
சிரிப்பு
———
சிரிப்புகள் பலவிதம்
சிந்தனையும் அதில் ஒருவிதம்
குழந்தையின் சிரிப்பு தெய்வீகம்
கடவுளின் சிரிப்பு கருணை நிதம்
வாய்விட்டு சிரியுங்கள்
நோய்விட்டுப போகும்
மனதிற்குள் சிரித்தால்
மெளனச் சிரிப்பு
வெளிப்படையான சிரிப்பு
விகற்பமில்லா சிரிப்பு
பணம் படைத்தவனின் ஆணவச் சிரிப்பு
புகழ்படைத்தோன் அகங்காரச் சிரிப்பு
வஞ்சகச் சிரிப்பு
மிஞ்சும் சிரிப்பு
கொல்லும் சிரிப்பு
வெல்லும் சிரிப்பு
சிரியுங்கள் சிந்தியுங்கள்
தீட்டுங்கள் தீர்வுகள்
முழுமையான முடிவுகள்
செழுமை யாக்கும் மக்கள் சிரிப்பை
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
2.1.24