சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
—————-
நிலாவில் உலா
————
தாய் மடியில் நிலாச்சோறு
முற்றத்தில் கட்டில் போட்டு உறக்கம்
நிலா வெளிச்சமதில் விளையாட்டு
இவையெல்லாம் இளமைக்கால
அழியாத நினைவுகள்
ஆம்ஸ் றோங் நிலாவில் காலடி வைத்தார்
அங்கு குடியேறலாம் என்றார்கள்
சாத்தியப் பட்டதா சாதனை படைத்ததா
வேணுமானால் நிலவில் உலா சென்று வரலாம்
இங்கு புலத்தில் நிலவைக் காண்பதரிது
இப்போ மின் விளக்கு அலங்காரம்
நிலாவாக்க் காட்சி தருகிறது
இந்த நிலாவில் மக்கள் கூட்டம். கூட்டமாக
உலா வருகின்றனர் பண்டிகைக்காக
கிறிஸ்து பிறப்பு விழா முடிய
மின்விளக்கு நிலா முடிந்துவிடுமே
கோடை வந்தால் நிலா வெளிச்சம்
கொண்டாட்டம் மக்களுக்கு
உலாசெல்ல உகந்த நேரமே
கெங்கா ஸ்ரான்லி