வியாழன் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

இரவின் வெளிச்சம்
———
இப்போதெல்லாம் ஐந்துமணிக்கே
இருட்டி விடும்
இருட்டென்றால் கும்மிருட்டு
தெருவெல்லாம் மின்விளக்கொளி
அதுவும் பகலாக தெரிவதற்கு
கொரோனாக்கு முதல்
மிகப் பிரகாசமான ஒளி
இப்போ குறைவு காரணம்
மின்கட்டண உயர்வு
என்றாலும் எல்லா வீட்டு யன்னலிலும்
ஒளிப் பிரகாசம் தொங்குகிறது
மின்ஒளி
என்வீட்டைத் தவிர
முன்பு எங்கள் வீட்டு யன்னலில்
ஒளிர்ந்தது மின்விளக்கு
இன்று தொங்க வைப்பவர் இல்லை யாதலால்
யன்னலும் கவலையில் இருக்கிறது
கிறிஸ்து பிறப்பு விழாவை யொட்டி
நடக்கும் நிகழ்வுகளை பார்க்கையில்
மனமெல்லாம் கவலையில்
என்னால் செய்ய முடியவில்லையே என
செய்யத் தோன்றவுமில்லை
மனதிலே ஏக்கம் மாறாத தாக்கம்
போக்கும் இந்த பாரம்
மனமே அழுகிறது அன்றாடம்
என்செய்வேன் நானும் எனது விதி என்ற போதும்
வெந்த படியே நானும் வாழ்க்கை ஓடத்திலே
கரையேறும் முயற்ச்சியுடன்