சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

விடியல்
——
விந்தைமிகு உலகில் சொந்தமாய்த் தேடும் விடியல்
எந்தையவர் மண்ணில் இயங்கிய தூறல் விடியல்
கந்தையும் கசக்கிப் பிழிந்து உடுத்தும் விடியல்
சந்தமாய் மண்ணில் சங்கிலியாய்
தொடரும் விடியல்
ஊழ்வினைப் பயனாம் உணர்ந்த செயல்
பாழ்வினை அகற்றிப் பதந்தேடும் விடியல்
ஏழ்பிறவிப் பிணி நீக்க ஏற்றம்காணும் விடியல்
வாழ்பிறவியில் அறம்செய்து கருணை காக்கும் விடியல்
மண்ணின் மைந்தர் மண்மானம் காக்க
எண்ணிய சிந்தையில் தோன்றிய விடியல்
கண்ணாம் எம்தாய் மண்ணை சுதந்திரமாக்க
விண்ணுக்கே சென்று வியந்து பார்க்கும் விடியல்
விடியலைத் தரும் உலகில்
மடியும் சில நிந்தனைகள்
அடியும் தடியும் போக்கும்
ஆற்றல் மிகு விடியலைக் காக்கும்
நன்றியுடன்
கெங்காஸ்ரான்லி
21.3.23