வியாழன் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

நிமிர்வின் சுவடுகள்
—————-
யாரால் இப்பூமிக்கு வந்தோம்
எப்படி இங்கு தங்கினோம்
எதற்காக நாம் வந்தோம்
என்பதை யாரும் சிந்திப்பதில்லை
பெற்றுவளர்த்து பாலூட்டி சீராட்டி
கற்க. கல்விதந்து கனவானாய் உயர்த்த
தாம்மெழுகாக உருகி நொந்து
எம்மை ஒளிபெறச் செய்தவர் யார்
வந்த சுவடுகள் மறந்து பூமியில்
வசந்தம் வந்ததும் தன்னிலை மாற்றி
புதுசொந்தம்
புளங்காகிதம் புன்னகை
இதுவெல்லாம் சேர இயற்கைக்கு அடுக்குமா
முதியவர் என்றதும் ஒரு ஏளனம்
முன்னாடி சென்றது அவரது யளவனம்
பின்னாடி நீயும் வருவாய் என்பதும்
ஏன் மறந்தாய் அதை இன்னமும்
நிமிர்வின் சுவடுகள் நிதர்சனமானது
நித்திலத்தில் அவை நிமிர்ந்தே நிற்கிறது
திமிரின் வேகம் எங்கோ பறக்கிறது
நிஐமான மூத்தோர் உள்ளம் பரிணமிக்கிறது
நன்றியுடன்
கெங்காஸ்ரான்லி
1.3.23