சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

பட்டினி

பசித்திடும் போதே
புசிக்க வேண்டும்.
பாமர மக்களின்
உணர்ச்சியை மதிக்கவேண்டும்.

பட்டினி ஏழைகளுக்கே சொந்தம்.
பாசம் ஏழைகளின் பந்தம்
இரக்கம் இவர் வாழ்வின் சுகந்தம்
ஏங்கிடும் அன்பிற்கான வசந்தம்.

பசிக்காக மாத்திரை உண்ணும்
பணக்காரன்.
பசிவராது இருக்க நித்திரை கொள்ளும்
ஏழைகள்.

பட்டினி இருந்தவனுக்குத்தான்
தெரியும் பசியின் கொடுமை.
பொன்மனச்செம்மல் பட்டினியை உணர்ந்தவர்
அந்த அனுபவமே நாள் தோரும் உணவு
கொடுக்க வைத்த தாம்.

பட்டினியால் பிள்ளைகள்
படிக்கவில்லை எனச்
சத்துணவு பாடசாலையில்
கொடுத்தது மனிதம்.

நாமோ இங்கே உணவை
வீணாக்குகின்றோம்
இன்று தாயகத்தில் பஞ்சம்
நாளை இங்கும் பஞ்சம் வரலாம்.

வந்தால் பட்டினியால்
மக்கள் மடியலாம்
பட்டினி வராமல் தடுக்க
முயல்வோம் மக்களைக்
காப்பாற்றுவோம்.

கெங்கா ஸ்ரான்லி