துளிநீர்
துளித்துளியாய் பெய்யும் மழை
தொடராய் பெய்யும் விடாதா மழை.
கடளினுள் கலக்கும் மழைத்துளி
கன மழையாவதும் துளிநீரே.
ஒழுகும் நீரை ஓடவிட்டு
கழுவும் வரை திறந்த நீரை,
கடகட வென ஓடினாலும்
நிறுத்த தோன்றா மனித இனம்.
நீரின் பெறுமதி தெரியவில்லை
நீரின்றி போனால் வாழ்வுமில்லை.
காரின்றி இருந்தால் மழையுமில்லை
காய்ந்து விட்ட நிலத்திற்கு ஒரு துளிநீர் இல்லை.
நீருக்கும் உண்டு பலவகைக் குணங்கள்
நீரும் மூன்றுமுறை பிழை பொறுக்கும்.
வேருக்கும் கொடுத்த துளிநீர் கூட
விருட்சமாக்கும் ஆலமரத்தை போல.
துளீநீர் என்று வீணாக்காது
துளி நீர் சேகரித்துக் குடத்தில்
தளிர்விடும் குருத்தை காப்பதுபோல்.
வளம் பெற சுய வாழ்வுக்கு
துளிர் நீர் அவசியமென்று உணர்க.
கெங்கா ஸ்ரான்லி