நிகழும் துன்பம்
பெண்கள் தினம் கொண்டாடும்வேளை
பெண்கள் நிலமை பேரின்னலாகியது.
கண்ணீரும் கம்பலையுமாக
கைக்குழந்தையுடன் காட்சி.
மனம் நெகிழும் செயல்
மனிதம் கொலை செய்யபடுகிறது.
மனிதர் பார்த்து இருக்கும்வேளை
மக்கள் குலையாகப் பலி.
புலம் பெயர்ந்த மக்கள்
அயல் நாட்டிடம் தஞ்சம்.
பலம் போருத்திய நாடு
புகலிடம் தருவதில் ஈடு.
காலம் கடந்து போகும்
கோலம் மாறும் நேரம்.
பாலம் போடும் நிலைமை
நிகழும் துன்பம் விலகுமா.
கெங்கா ஸ்ரான்லி