வியாழன் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

உருமாறும் புதிய கோலங்கள்

கடவுள்தான் உருமாறுவார்
கேள்விப்பட்டதுண்டு.
கட்சிகள் உருமாறுவது உண்டு.
கடமைகளும் உருமாறுவதுண்டு.

இங்கு மனிதரும் இப்போ
உருமாறுகின்றார்கள்.
மனிதம் மனிதநேயம் என்றளவில்
உருமாறும் தன்மையில் மாற்றம்.
மக்களுக்கிடையே புரிந்துணர்வு,கொள்கையில்
உருமாறுகிறது.
கொரோனாவால் உருமாறியதும்
குடங்கி வாழ்வதும்
அடக்கி வைத்தவர்.
அடங்கி வாழ்வதும்
உருமாறும் புதிய கோலங்கள்.

மக்கள் மக்களாக இல்லை
மன அழுத்தம், தனிமை
விரக்தி உறுமாற வைத்தது.
எண்ணங்கள் ,சிந்தனைகள்
உருமாறும் புதிய கோலங்கள்.
கோலங்கள் உருமாறட்டும்
காலங்கள் பதில் சொல்லட்டும்.
கடந்து போகும் இவையும்
உருமாறும் புதிய கோலங்கள்
வாழ்வில் இனிமை பிறக்க
உதவட்டும்.

கெங்கா ஸ்ரான்லி