சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

காதல் வாழ்க

காதல் கொண்டேன் நானும்
கற்ற கல்விமீது தானும்.
இயற்கை மீது கொண்ட காதல்
இம்சை தவிர்த்து விடும்.
எதிரி மீது காட்டும் காதல்
எதிரியை திரும்பிப் போகவைக்கும்.
பெற்றார் மீது வைத்த காதல்
புண்ணிய காலம் உள்ள நேரம்.
பிள்ளைகள் மீது கொள்ளும் காதல்
பிறவி விட்டு நீக்கும் வரை.
மண்ணின் மீது கொண்ட காதல்
மானம் காத்து வாழ வைக்கும்.
பெண்ணின் மீது கொண்ட காதல்
ஆண்மகனை உயர்த்திக் காட்டும்.
காதலன் காதலி வாழ்வில் இணையும்
காதல் திருமண முடிவில் தானே.
இடையில் முறிந்த காதல்
தேவதாஸ் பார்வதி போலே.
அம்பிகாபதி அமராவதி காதல்
அமரத்துவம் பெற்ற காதல்.
ரோமியோ யூலியட் காதல்
வரலாறு பேசும் காதல்.
காதல் வாழ்க! காதல் வாழ்க!

கெங்கா ஸ்ரான்லி