வியாழன் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சருகான வாழ்வு
வகுத்தான் இறைவன் ஒரு பாதை
பகுத்தான் மனிதன் நான்கு நிலமாக.
தொகுத்தான் சங்ககால நிகழ்வாக
மிகுதியில் கண்டான் மனிதன் நிஜமாக.

மாய்ந்து மாய்ந்து ஓடி உழைத்தான்
சாய்ந்து இருக்க ஒரு கணமுமில்லை
பாய்ந்து மிதித்த கடாவைப் போல
மேய்ந்து சினந்தான் எல்லையில் மிருகமாக.

தாக்கம் அவன் வாழ்வில் தண்டனை
ஏக்கம் குடும்பத்தில் சுமூக மில்லை
ஊக்கம் உழைப்பதில் போனது தான்
வாக்கும் இப்போ மாறிப் போச்சே.

தேய்ந்து ஓடாகிய உடம்பு இப்போ
ஓய்ந்து விட்ட கால்கள் விறைத்து
ஆராய்ந்து பார்க்க வாழ்வில் மீதி
காய்ந்து விட்ட சருகான வாழ்வு.

கெங்கா ஸ்ரான்லி