சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சொர்க்கம்

காத்திருக்கும் இளம்பிஞ்சு
கவலையான முகத்துடன்,
அன்னை கொண்டு
வரும் கஞ்சி
அணைத்துவிடும்
பசிக்கொடுமை தனை.
அரவனைத்த அன்புமுகம்
அன்னையின் திருக்கரங்கள்
அழுக்குச் சட்டை
அம்மணக் கோலம்
அத்தனையும் பெற்றவருக்கு
அருவருப் பில்லா நாற்றம்.
பாசத்திற்குள் பதுக்கி
வைத்த சோகம்
பஞ்சனையில் கிடைக்காத
பரமலோக வேதம்.
மிஞ்சி மிஞ்சி போனால்
மீளும் அந்த சொர்க்கம்
அன்னையில் சேலையில்
ஆடிடும் ஏணை சுகம்
யாருக்கு கிடைக்கும்
இதைவிட ஏது
சொர்க்க லோகம் !

கெங்கா ஸ்ரான்லி