கிராமத்து பெண்களின் முன்னேற்றம்
பெண் முன்னேற்றம் வேண்டி
சங்கம்,பேரவை அமைத்தனர்.
இன்னும் முன்னேறவில்லை
ஏனெனில் கிராமத்து பெண்கள்.
நகர்ப்பகுதியில் உண்டு
முன்னேற்றம்
கிராமத்தில் ஆணுக்குப் பின்தான்
பெண்கள் இருக்கின்றார்.
நகரங்களில் இன்றைய
காலத்தில்
ஆணுக்குப் பெண் நிகராக
கல்வியில்,வேலையில் இருக்கின்றார்கள்.
பின் தங்கிய இடங்களிலே
பெண்களை வெளியில் விடமாட்டார்
இப்பொழுது தான் சிறிது சிறிதாக
கல்வி கற்று முன்னேறுகின்றார்.
கிராமத்து பெண்கள்
பயந்தவர்கள்.
நகரத்துப் பெண்கள்
துணிச்சல் உள்ளவர்.
எதையும் சமாளிப்பார்கள்.
இனிவரும் காலங்களில்
கிராமத்து பெண்கள்
துணிந்து செயல்படலாம்
கல்வியில் மேம்படலாம்
என்றால் தான் உங்கள்
முன்னேற்றம் உலகறியும்
கெங்கா ஸ்ரான்லி