பரவசம்
பாமுகப் பூக்கள்
பாமுகத்தில் வெளியீடு பரவசம்..
பாவையின் தொகுப்பில்
சந்தம் சிந்திய கவிதை பரவசம்.
இருபது பேரின் இணைவு
இசைந்த பல கவியின் பரவசம்.
இன்னும் தொடரும் இணைப்பணி.
இனிதே நடப்பதுப ரவசம்.
தைபிறந்தது தரணிக்கு பரவசம்.
தைமகள் வருகை மக்களுக்கு
நிம்மதி கிடைக்கும்
என்ற நம்பிக்கை பரவசம்.
மக்கள் வாழ்வு நோய்நொடியின்றி
சிறக்கட்டும்.
மனிதம் இன்னும் நிலைக்கட்டும்
எல்லோரையும் பாதுகாக்கட்டும்
இதனால் நன்மை கிடைக்கட்டும்
எல்லோரும் பரவசம் அடையட்டும்
மங்கல நிகழ்வுகள் நடக்கட்டும்
மற்றோரை மதித்து நினைக்கட்டும்
தன்னலமற்ற சேவையிலே
தன்னம்பிக்கை பரவசம் பிறக்கட்டும்
கெங்கா ஸ்ரான்லி