வியாழன் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

கொண்டாட்டக் கோலங்கள்

இன்பமலர்கள் பூத்துக் குழுங்கும்
சிங்காரத் தோட்டம்.
எங்களுக்கு எந்நாளுமே
ஒரே கொண்டாட்டம்.

தைபிறந்து விட்டதே
இனி கொண்டாட்டம் தான்.
தை பிறந்தால் வழிபிறக்கும்
ஏழை எளியவர்களுக்கும் வழி பிறக்கும்.

இந்த மாதம் முழுதும்
தமிழ் மொழித் திருநாள்.
தமிழர்களிடையே மகிழ்ச்சி
தனியார் கட்கு புகழ்ச்சி.

விழாக் கோலங்கள்
வித்தை காட்டிவிட்டது.
வைரஸ் காரண கர்த்தாவாம்
விளம்பினர் மக்கள்.

கொண்டாட்டம் குதூகலம்தான்
குமூகத்தை சந்திப்பதில் தான்.
இருந்தாலும் ஒருத்தருக்கும்
நேரமில்லையாம் ஆம்
நேரம் எங்கே போனது
மனிதர் மனதிலா
கால வேகத்திலா
ஒன்றுமே புரியவில்லை.

கொண்டாட்டம் வரவேண்டும்
மக்கள் மகிழ்வுடன் வாழவேண்டும்
துன்பம்,சோகம் விலகி
மலரட்டும் கோலங்கள்.

இரு சகோதரிகளுக்கும் பாராட்டும், நன்றியும்
கெங்கா ஸ்ரான்லி