சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

பாமுகப் பூக்களின் பரிமாணம் சந்தம் சிந்தும் கவிதையில் பிரமாதம்

மரத்திலிருந்து விழுந்த
மலர்கள் மாலையானது
பாமுகத்திலிருந்து விழுந்த பூக்கள்
பாமாலையாகியது.

பாமுகப் பூக்கள் பலவர்ண
பாக்கள் பன்முக கவிஞர் சமர்ப்பணம்.
சங்கமித்த சோலைப் பூக்கள்
நவரசம் நிரம்பிய நர்த்தனம் புரியும்
நவரசப்பூக்கள்.

மனஉணர்வுகளின் வெளிப்பாடு
மனதில் தோன்றும் துளிர்ப்போடு
கிழமையில் ஒருநாள் சந்தம்சிந்த
வழமையாய் கவிஞர் பாவும் எழுத
இணைந்து இருபது பேர்
எழிலாய் பாமுகத்தில்
பாவை தொகுப்பில்
பதிவாய் வந்ததே.

பாமுகப் பூக்கள் நூலாய் வர
உழைத்த நல்லுள்ளங்களுக்கு
உளம் மிகு வாழ்த்துகள்.
கரிசன மூட்டி களம் தந்த
அதிபர் நடாமோகன் தம்பதிக்கும்
வாழ்த்துகள்.
தொகுப்பாளர் பாவை அண்ணா
தம்பதிக்கும் வாழ்த்துகள்
அனைவருக்கும் பாராட்டுகளும்
வாழ்த்துகளும்

நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி