சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

தைமகளே வருக

தைமகளே வருக வருக
தரணியெங்கும் புகழ மகிழ
தமிழர் புத்தாண்டு மலர்க
மக்கள் மனங்கள் பூரிக்க.

பழைய காகிதங்கள் எறிய
புதிய தாள்கள் எழுத
மகிழ்வில் எழுந்து மிளிர
மக்கள் களிப்பிலே திகழ.

தைமகளே பல எதிர்பார்ப்புடன்
மக்கள் உனை வரவேற்க காத்திருப்பு
தை மகளே நலங்களுடன் வளங்களும்
தந்திடு தை மகளே தந்திடு தைமகளே.

வருவாள் தைமகள்
தருவாள் கோமகள்
பெறுவோம் நோய் நொடி
இல்லா வாழ்க்கை.

கெங்கா ஸ்ரான்லி.