சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
நிச்சயதார்த்தம்
—————-
நிச்சயதார்த்தம் நிரந்தரமான தோற்றம்
நிலைத்திடும் வாழ்வினைப் போற்றும்
இவருக்கு இவர் என்னும் பந்தம்
இல்லற வாழ்வில் இணையும் சொந்தம்
பெற்றார் சம்மதம் பெரும் பேறாம்
உற்றார் சகிதம் உரிமையோடு நிகழும்
மனங்கள் ஒருமித்த காதல் வாழ்வு
தினமும் செங்கரும்பாய் தித்திக்கும் போது
மணவாழ்வின் முதற்படி மங்கையின்
எண்ணம்
திருமண பந்தம் சேர்த்து வைக்கும் வண்ணம்

வாழ்க்கை வளம்பெற வாழ்த்தும் உன்னதம்
வாழையடி வாழையாகத் தொடரும்
பன்னமுதம்
நிச்சயிக்கப்படும் திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயதார்த்தம் செய்கிறோம் இல்லத்தில்
இல்லறத்தில் நிச்சயம் மணமக்கள்
செயிக்க
நல்லறமாக நிச்சயதார்த்தம் சிறப்புற சொலிக்க
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
13.2.23