சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
மணி
——-
கோவில் மணியோசை
கொடுக்கும் இன்பம் மனதிற்கு
அதிகாலை ஐந்து மணி
நல்லூர் மணி ஒலிக்கும்
கோழி கூவி எழுப்புவது போல
மணிஓசை எம்மை எழுப்பும்
அந்த நேரம் ஆனந்தமயமான நேரம்
மறக்க முடியா காலம்
இங்கு மணி ஓசை கேட்பது அரிது
மனிதன் ஓட ஓடி உழைப்பது போல்
மணியும் ஓடிக்கொண்டே இருக்கும்
மனிதன் இரவிலாவது ஓய்வெடுப்பான்
மணி ஓய்வு எடுப்பதே இல்லை
நேரம் பொன்னானது என்பர்
ஒவ்வொரு மணித்துளியும் பொன் போன்றதே
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
18.6.23