வியாழன் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

பொசுக்கிய தீயும்
பூத்திட்ட பொலிவும்
———
தெற்காசியாவில் இரண்டாவது நூலகம்
திக்கெட்டும் பேசப்பட்ட நூலகம்
பலதுசையில் இருந்து பெறப்பட்ட நூல்கள்
பொசுக்கப்பட்டதே பாவிகள் ஈனச்செயலல் தீயில்
தமிழர்களின் அறிவின் ஆற்றல்
கற்பதில் அவர்களது ஏற்றம்
கண்டார்கள் பொறாமையின் தோற்றம்
காடையர்கள் கண்டதிந்த மூர்க்கம்
நீலிக் கண்ணீர் வடித்தோரும் உண்டு
நீக்கமற வருந்தியவரும் கண்டு
பாஸ்ரரும் பரிதாபமாக இறந்தது என்று
பாவிகளின் கொடூரச் செயலே காரணம் என்று
அழகான கட்டிடம் சான்றோரல்
வடிவமைக்கப் பட்டு கட்டப்பட்டது
அங்குதான் முத்தான நூல்களும்
நிரம்பி இருந்தது
அறிவுக் களஞ்சியமாகத்
திகழ்ந்தது
ஆகா பெருமை கொண்டது தமிழினம்
அந்தோ!
பொசுங்கி விட்டதே தீயினால்
மீண்டும் புணரமைப்ப செய்தாலும்
முந்திய நூலும் இல்லையே
பொலிவுடன் தோற்றம் தான்
பொலிவுடன் தெரியும் கட்டிடம்
பொசுக்கிய நூல்களின் பதிவிடம்
மீட்டிட முனையும். மக்களும்
முக்கிய தேடலின் நிலைதானே