சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
——-
முள்ளிவாய்க்கால்
——-
முள்ளிவாய்க்காலில் முடக்கப் பட்ட உண்மைகள்
பள்ளி செல்லும் பிள்ளைகள்
மடக்கிய தன்மைகள்
அள்ளித் தரும் அகிலம் நம்மை
காக்குமென்ற நினைவுகள்
குள்ளித் திரிந்த குழந்தைகள்
துவண்டு விட்ட பெரும் சோகம்
உலகநாடுகள் கைகொடுக்கும்
என்ற நம்பிக்கை
ஆனாலும் அவர் வேடிக்கை பார்த்த
அவலங்கள்
உப்புக் கடல் நீரில்
கஞ்சி காய்ச்சி உண்ட நிலை
உயிரே போகையிலும் கள்ளதிலா நிலை
முதியோர் இளையோர் பிஞ்சுகள்
குழந்தைகள்
அழுத் ஓலங்கள் உயிர் அடங்கும் வேளை
காப்பாற்ற யாரும் வரமாட்டார்களா
என்ற ஏக்கம் ஒரு பக்கம்
யாருமே வரவில்லை என்ற தாக்கம்
மேலிருந்து கீழிரிந்து குண்டு
காலிருந்து கையிருந்து மொண்டு
பட்டுத் தெறித்தது பல உயிர்கள் எண்டு
பத்திரிகை ஊடகம் தெரிவித்த சான்று
பாவிகள் செய்த பஞ்சமா பாதகம்
எல்லாம் நடந்தது எத்தனை உயிர்கள்
ஏதிலியான குடும்பம்
இழந்தவை ஏராளம்
நினைவுகள் சுமந்து கதறுவது
மே பதினெட்டு தமிழர் வாழ்வின்
இரத்த்தத்தில் எழுதிய வரலாறு
நன்றியுடன
கெங்கா ஸ்ரான்லி
22.5.23