வியாழன் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்
————
கழிவுகள் வெளியேற்ற கனரக வாகனங்கள்
பிழிவுகள எங்கே செல்லும் பிரதான கேள்வி
குழிவுகள் குண்டுகள் கொப்பளிக்கும் நீர்நிலைகள்
தவறிவிழுந்தால் தலை சகதிக்குள் தான்
சூழலில் மாசு படிந்ததால்
ஓசோனில் ஓட்டை
சூழலும் புகையால்
முட்டி வழியுது
கண்ணி உலகின் முன்னேற்றம்
கண்மூடித் தனமான பின்்விளைவு
விஞ்ஞானம் முன்னேற
அஞ்ஞானம் அருகிவர
ஆங்காங்கே மக்களின்
அவலங்கள் கதியற்று
போர் என்னும் ரீதியில்
பூலோகம் புகைமண்டலம்
கார்மேக்க் கருக்கலினால்
பெய்துவரும் மழை
கடலதனையே தானுயரும்
கடலெல்லாம் நீர் நிரம்ப
கழிவுப் பொருளும்
அதற்குள் அடக்கும்
பொலித்தீனும் கரையாமல்
மீனின் வயிற்றில் இருக்கும்
இதைக் கண்டும் மனிதன்
கழிவுகளை தண்ணீரில்
தள்ளுகிறான்
கழிவுப் பொருட்களை கப்பலேற்றி
வறிய நாட்டிற்கு அனுப்பி விட்டு
அவர் இங்கே ஆனந்தமான வழ்வு
வாழுகிறார்
கடலுக்குள் கழிவுகள்
கரைவது எப்படி
காலவோட்டத்தில் கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்
மனிதன் உயிர் வாழமுடியுமா
என்ற கேள்விக் கணையுடன்