வியாழன் கவிதை

கெங்கா ஸரான்லி

நினைவலைகள்
————-/
இளமையில் கோடி நினைவுகள்
இன்ப வாழ்வின் எதிர்பார்ப்பு அலைகள்
துன்பமறியா சூழல் அமைப்பில் வறுமை
துள்ளித் திரியும் பருவ வழமை
குடிமனைகள் குதூகலம் தந்தது
குடும்பங்களும் கூடி மகிழ்ந்தது
பாசம். அங்கு நிரம்பி வழிந்தது
பாயும் தலையணையும் பகிர்ந்து படுத்தது
ம்மனைகள் இன்று மாளிகைகள்
மாளிகை வாசம் மனதில் நிம்மதி இல்லை
பொன்பொருள் எக்கச்சக்கம்
போடுவதற்கு இடமும் இல்லை
ஓட ஓடி உழைக்கும் மனிதா
உண்ணாமல் உறங்காமல் தேடுகிறாய்
சேர்க்கும் சொத்தோ கூட வராது
சேமித்த பணமும் கையில் இருக்காது
பாடுபட்டது கொஞ்ச நஞ்சமல்ல
பாழாய்ப் போன ஆசை யாரை விட்டது
வீடு மனைவி பிள்ளை இருந்தும்
விரும்பிய வாழ்வின்றி விதி விளையாடும்
நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் வலிக்கும்
நினைவலைகள் வந்து தெறிக்கும்
நினைந்து நினைந்து நெஞ்சம் துடிக்கும்
நீங்கா நினைவுகள் உம்மை நெருங்கும்
நித்தம் சொரியும் கண்ணணீர் சேர்நது
உம் அன்பில் கரையும்