வியாழன் கவிதை

கெங்காஸ்ரான்லி

வாழ்ந்த சுவடுகள்
——-
மூத்தோர் வழிநடத்தல்
முன்னைய புண்ணியமாகும்
வாழ்ந்தோர் அனுபவங்கள்
நாம் படிக்கும் புத்தகமாகும்
அவர் சொல்லும் அறிவுரைகள்
வேம்பாக்க் கசக்கும்
ஆழ்ந்ததனைச் சிந்தித்தால்
அத்தனையும் பொக்கிசமாகும்
வாழ்க்கையின் முக்கிய படிவங்கள்
வாழவந்தோர் காணும் உண்மைகள்
காலம் காட்டும் சில கண்ணாடி
கானல் நீரின்ஒளி நிழலாகும்
முதியோரை மதித்தல் முக்கிய கடமையாகும்
முன்னின்று செய்யும் உதவி
ஊழ்வினையை அகற்றி விடும்
மதியாத மனிதர்கள் மதிகெட்டு போகையில்
விதிகூட விளையாடும் வித்தை பொருளாக
சுவடுகள் சுவையானது சுவர்க்க பூமியில்
கபடு ஏதுமில்லா கண்ணியம் நிலையானது
ஏட்டில் எழுதப்படும் காவியங்கள் இங்கே
எடுத்துரைக்கும் வாழ்ந்த சுவடுகள்
வடித்து வைத்த ஓவியங்கள்