மலைப்பு
———
வருடம் ஒன்று கழிந்தது
வாழ்ந்த நினைவுகள் விரிந்தது
அருகில் இருப்பது போல்
ஆழ்ந்த சிந்தனை உதிர்வுகள்
பூமியில் மனிதனாய் பிறந்து
தமிழிலே சாரங்கள் தொடுக்க
தன்னலமற்ற சேவை செய்த
தன்னிகரில்லா மனிதன் இவன்
இவன் புகழ் பாடினார்
எல்லோரும் கேட்க அவரில்லை
அன்பினால் ஆட்கொண்டார்
அனைவரையும்
அழுகின்றோம் அவரின்றி
இப்பூவுலகில்
மலைப்பு தான் வருகிறது
மாண்பு மிகு மனிதனை நினைக்க
நல்ல ஆத்மா
நல்லதே செய்தார்
நிம்மதியாக நித்திய
ஆறுதல் அடையட்டும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
12.9.23