சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
புதிர் !
கழனியதன் விழைச்சலிலே
களிப்பாகும் மனத்தோடு
கனவுகளைச் சேர்த்தெடுத்தே- முதல்
கதிரறுப்பர் புதிரென்றே!
புதிரதுவும் மனையதனில்
பூக்கவைக்கும் இன்பமென
பொறுப்பாகக் கட்டிவத்தே
பொங்கலும் இட்டிடுவர்
பொங்கிடும் நிறைவுகட்காய்!

புதிரான நம்பிக்கைகள்
புவனமெங்கும் மக்களிடை!
பதராகிப் போகாமல்
பக்குவமாய் வாழ்வதற்காய்!
புதிர்போட்டு விடைகேட்டே
புத்திக்கு வேலைதந்து
சித்திகளைப் பெறவைப்பார்
யுத்தியாய்ப் பெரியவர்கள்!

புதிராகிப் போனதுவே
மூத்தோருடன் கூட்டுவாழ்வு
பரிதவிக்கும் இதயமது-இப்
புதிருக்கு விடைதேடிப்
பரிதவித்துத் தனிமையிலே!

கீத்தா பரமானந்தன்16-01-23