சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

நீர்க்குமிழி !

முட்டிய நீரிடை
மூச்சுடன் எழுந்தே
வட்ட உருவினில்
வசீகரம் கூட்டிச்
சட்டென நொடியிற்
சரித்திரம் முடிக்கும்
நெட்டுயிர்ப் பற்ற
நீரின் குமிழி!

பட்டு பவிசு
புனுகு சந்தணம்
பற்றியே பூசிக்
கட்டுடல் போற்றிக்
கட்டிடும் கோட்டையும்
காத்திரமற்ற வாயுக்குமியாய்
கணத்தில் மறையும்
காகிதத் தோணியாய்!

ஆசைக் கடலிலே
அனுதனம் பவனி
அடுத்தவர் உணர்வை
அனுதினம் வதைத்தே
ஆடிடும் சதுரங்கவாட்டம்
எடுத்த பாத்திரம்
எழிலாய் முடிக்க
ஏற்றிட்ட நாடகம்
வாழ்வெனும் தோரணம்!
முடிவுரை அறியா
நீர்க்குமிழியாய் என்றும்!

கீத்தா பரமானந்தன்27-03-2023

நீர்க்குமிழி !

முட்டிய நீரிடை
மூச்சுடன் எழுந்தே
வட்ட உருவினில்
வசீகரம் கூட்டிச்
சட்டென நொடியிற்
சரித்திரம் முடிக்கும்
நெட்டுயிர்ப் பற்ற
நீரின் குமிழி!

பட்டு பவிசு
புனுகு சந்தணம்
பற்றியே பூசிக்
கட்டுடல் போற்றிக்
கட்டிடும் கோட்டையும்
காத்திரமற்ற வாயுக்குமியாய்
கணத்தில் மறையும்
காகிதத் தோணியாய்!

ஆசைக் கடலிலே
அனுதனம் பவனி
அடுத்தவர் உணர்வை
அனுதினம் வதைத்தே
ஆடிடும் சதுரங்கவாட்டம்
எடுத்த பாத்திரம்
எழிலாய் முடிக்க
ஏற்றிட்ட நாடகம்
வாழ்வெனும் தோரணம்!
முடிவுரை அறியா
நீர்க்குமிழியாய் என்றும்!

கீத்தா பரமானந்தன்27-03-2023