சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

ஊக்கம்
வாழ்க்கைப் படகை
வலுவுடன் நகர்த்த
வலிமைத் துடுப்பாய்
வளந்தரும் மூலம்!

நோக்கம் விரிந்து
ஆக்கம் பெருக்கி
ஆழுமை நிறுத்த
ஊக்கம் தானே
உடன் இருப்பாகும்!

சரித்திரம் படைத்த
சாதனைத் தடங்கங்கள்
பரிச்சயம் செய்வது
உரித்தென ஆக்கியோர்
உறுதியாம் ஊக்கமே!

தடைகளை விலக்கித்
தாங்கிடும் படையாய்
தளர்வினைப் போக்கித்
தாங்கியே உயர்த்தும்
நிறைவுடை சிகரம்

தேங்கிடா ஆறாய்த்
தெள்ளிய நதியாய்
ஓய்வினிறித் தொடரணும்
உணர்வினில் ஊக்கம்!

கீத்தா பரமானந்தன்
01-04-24