சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

வேலி அடைப்போம்!
போலிகளின் உலகினிலே
போக்கற்று அறமுமிங்கே!
பஞ்சமா பாதகமும்
பயமற்றுத் தொடர்கிறது!
சிந்தையைத் தொலைத்திட்டே
சீரழியும் இளையோர்கள்
வாதையின் பிடியினிலே
வம்சமும் அழிகிறது!

கணினி யுகமென்றே
கணக்கற்ற எதிர்வினைகள்
மனம்போன போக்கினிலே
மந்தைகள் நிலையினிலே
கண்டதைச் செயலாக்கும்
காட்டுமிராண்டிக் கூட்டமென
சந்ததியைக் காத்திடவே
சடுதியாய் அடைக்கணும் வேலி

கஞ்சாவும் போதையும்
புத்தியை மழுங்கடிக்க
பிஞ்சுகளும் உயிர்குடிக்கும்
பேய்களின் நடமாட்டம்!
அஞ்சித்துடிக்கும் அவலத்தில்
அனுதினமும் அன்னையர்
விஞ்சுகின்ற வினைகாக்க
விரைந்தே அடைப்போம் வேலி

கீத்தா பரமானந்தன்11-02-24

ச்ந்தம் சிந்தும்சந்திப்பு