சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

நிலாவில் உலா!

கொஞ்சிவரும் ஒளியாகக்
கோலமிடும் உறவாக
நெஞ்சமதை நிறைவாக்கும்
நித்திலத்தின் கனவே!
விஞ்சுகின்ற காதலுக்கே
விரைந்திடுவாய் தூதாக
மஞ்சமிட்டே நிறைகின்றாய்
மதியொளியே எமக்காக!

சொந்தமெனச் சுற்றுகிறேன்
சொக்கியுமே இரசிக்கின்றேன்!
அந்தியதன் துணையாக
அஞ்சுதலைப் போக்குகிறாய்
சிந்தையது இனித்திடவே
சிந்துகின்றாய் கவியாகி
வந்தனையாம் வான்நிலவே
வாஞ்சையுள்ள பேரெளிலே!

கற்பனை கடந்திட்ட
கந்தர்வ எழிலே
விஞ்ஞானம் மெஞ்ஞானம்
எல்லாமும் இன்பமுடன்
நிலாவே உன்னுடனே உலா!

கீத்தா பரமானந்தன்18-12-23