சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

மௌனம்!

மொழியில்லா வேதமாய்
மொழிந்திடும் பாடம்
மலையெனும் சுமையும்
மாற்றிடும் அமிர்தம்
வரும்பகை அகற்றும்
வலிமையாம் பாணம்
கலையிதைக் கற்றால்
கணங்களும் இன்பம்!

கண்களில் பேசிக்
காரியம் முடித்துக்
காதலின் தூதாய்க்
கனவுகள் வளர்க்கும்!
ஆழ்கடல் ஆகி
ஆட்டியும் வைக்கும்
ஆயிரம் அர்த்தத்தை
அமைதியாய்ச் சொல்லும்!

மோனத்தின் எழிலாய்
மூர்க்கத்தைக் குறைத்திட
ஞானிகள் நவின்ற
ஞாலத்தின் பாடம்!
பாதைகள் மாற்றிப்
பாடமும் நடத்தும்
கீதையாய் நின்றே
கீர்த்தியைப் புகட்டும்!

மௌனத்தை வெல்லும்
மொழியேதும் இல்லை
மனங்களைப் புடமிடும்
மகத்துவம் இதுவாய்!

மௌனம்!

மொழியில்லா வேதமாய்
மொழிந்திடும் பாடம்
மலையெனும் சுமையும்
மாற்றிடும் அமிர்தம்
வரும்பகை அகற்றும்
வலிமையாம் பாணம்
கலையிதைக் கற்றால்
கணங்களும் இன்பம்!

கண்களில் பேசிக்
காரியம் முடித்துக்
காதலின் தூதாய்க்
கனவுகள் வளர்க்கும்!
ஆழ்கடல் ஆகி
ஆட்டியும் வைக்கும்
ஆயிரம் அர்த்தத்தை
அமைதியாய்ச் சொல்லும்!

மோனத்தின் எழிலாய்
மூர்க்கத்தைக் குறைத்திட
ஞானிகள் நவின்ற
ஞாலத்தின் பாடம்!
பாதைகள் மாற்றிப்
பாடமும் நடத்தும்
கீதையாய் நின்றே
கீர்த்தியைப் புகட்டும்!

மௌனத்தை வெல்லும்
மொழியேதும் இல்லை
மனங்களைப் புடமிடும்
மகத்துவம் இதுவாய்!