சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

திமிர்
அடங்கா மனத்தின்
ஆணவ ஆட்டம்
கடமை கண்ணியம்
கருத்தினில் அகற்றி
மடமைத் திரையாய்
மனத்தினை ஆட்டி
விடமாய் எழுந்தே
வீழ்த்திடும் திமிர்!

தானே மேலெனும்
தற்குறி யாகி
மானாய் மயிலாய்
மயக்கும் பிஞ்சும்
ஊனும் உயிரும்
உருக்கி அழித்திட
வீணே எழுந்திடும்
விதண்டா வாதம் திமிர்!

தன்நலம் ஒன்றே
தரணி வாழ்வாய்
உண்ணியாய் ஒட்டி
உருட்டிப் பிரட்டி
எண்ணிய முடிக்கும்
திண்ணிய பாணம் திமிர்!

கீத்தா பரமானந்தன்07-03-2022