சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

பாமுகப் பூக்கள்!

எண்ணத்தின் நாற்று
எழுத்தாணி வீச்சு
பன்முகப் படையலாய்ப்
பரவிய ஊற்று

வண்ணக் கதம்பமாய்
வாசனை வீசியே
திண்ணத்தை நிறுத்திய
தேட்டமாம் பதிவு

பாமுகப் பந்தலின்
பதியமாம் ஏடு
பாவை அண்ணா
பதித்த முத்து

வாடா மலரெனும்
வனப்பாம் மிளிர்வு
சூடின ஈர்பத்து
வதனத்தின் களிப்பு

சந்தக் கவியாய்
சிந்திடும் தேனே
தந்தேன் மலர்வாய்
வந்தனம் உனக்கே!

கீத்தா பரமானந்தன்18-01-2022