சந்தம் சிந்தும் கவிதை

“கவுனி கறுப்எபரிசி”—ல்லாளன்-

புதையலை தேடும்
பூசை,பலி,பலித்த பலன்
அதிசயம் அதிஷ்டம் என்று
கதைகள் பல காதில் விழும்.
அன்றும்தான் துரை சொல்ல
அதற்கு மாஸ்ரர் தலையாட்ட
நம்ப மனம் மறுத்தாலும்
நானும்தான் முயன்றேன்.
நீரழிவு சர்க்கரை நோய்
நீங்காமல் குறையாமல்
பேரழிவை உடம்பிற்கு
பிறப்பிக்கும் என பயந்து
ஈர் ஏழு குளிசை இரையோடு
எட்டாண்டாய்
**
வாங்கிவந்தேன் துரை சொன்ன
தாய்லாந்து கறுப்பரிசி
ஆக்கி அதை கஞ்சியாய்
ஆறு ஏழு நாட்களுண்ண
சர்க்கரை குறைந்தது
சட்டென்று ரத்தத்தில்
உக்கிரமாய் ஒட்டி ழின்று
உடற் ஊறு விளைவித்த
சர்க்கரையை குறைத்த
சாதனையை செய்த அந்த
அற்புத கறுப்பரிசி.
அரிசிச் சோறு உண்ணும்
ஆசியரின் நோய் என்பார்
மருந்தும் . இதற்கு
எம் மண்ணிலேயே
விளைகிறது
**கவுனி கறுப்பரி காட்டும் மருத்துவத்தை
அவனிக்கு கூறுங்கள்
அவதிப் படுவொர்க்கு
உதவி புரியுங்கள்
பயனை உணர்ந்தவன் நான்
பகருகின்ற உண்மை இது.