சந்தம் சிந்தும் கவிதை

கலாதேவி பத்மநாதன்

சந்தம் சிந்தம் சந்திப்பு தலைப்பு — நீர்க்குமிழி

நீர்க்குமிழி வாழ்க்கை நிலையற்ற தோற்றம நீர்நிலை உலாவலம் நிரந்தரம் காணுமோ

பார்துளிர்க்கத் துளிநீரின்றேல் பல்லுயிரும் உயிர்த்திடுமோ பாங்காய் புறஅழுக்கு பற்பலவும் அகற்றிடுமே

வேர்பணி துளிநீரும் வேண்டியே காத்திடுமே வேகமுடன் உறிஞ்சியே வேண்டுமிடம் சேர்த்திடுமே

ஊர்செழிக்க
உயிர்வசிக்க
ஒருதுளி பலவாகி
ஊன்வளர்க்க உணவாகி உலகவாழ்வும் துளிர்த்திடுமே

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக கலாதவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியாவில் இருந்து