சந்தம் சிந்தும் சந்திப்பு
தலைப்பு – சாந்தி
நஞ்சுதுவைத்த அம்பாய் நெஞ்சைசுடும் வார்த்தை
அள்ளிதெளிக்கும் போது
ஆறு மனமே ஆறு
ஐம்புலனை அடக்கும் ஆற்றல் உள்ளபோதும் சாந்திகொள்ள மரறுப்பின் சரிந்துவிடும் கோட்டை
இரத்தஅழுத்த உயர்வைகுறைக்கும் சாந்தி
இதயமேநீ அமைதிகொள்
உடல் நலம்பெற ஏந்தி
பொறுமையின் எல்லை. பெருமைமிகு சாந்தி பெருமிதம் கொள்வேன் படர்ந்திடு எம்மில்
போற்றுவோர் போற்றிட தூற்றுவோர் தூற்றிட ஏற்றிவிடும் ஏற்றருளும் எண்ணத்தின் சாந்தி
சாந்திகொள் மனமே சந்தர்ப்பம் உன்னை கோபம்கொள்ளச் செய்யும்
கோடிபெறும் தணிவாய்
நன்றி வணக்கம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா