சந்தம் சிந்தும் கவிதை

கலாதேவிபத்மநாதன்.

அருந்து
கிடைக்கும்
தொப்புள்
கொடி

அறுந்து
கிடக்கும்
ஆதிதொப்பு கொடியுறவே, உறுதியிட்டு கூறெனக்கும்
உனக்கும்
உறவென்ன

ஒருகுலை
காயென்றார்
ஒருதாய் பிள்ளையென்றார் கருவாய்
உருவாய்
கரைதாண்டும்
உறவென்றார்

அண்ணன்
தம்பியாம்
அறுந்த
பந்தமென்றார்

தீண்ணமாய்
உறவெல்லாம்
திசைகெட்டு போனதென்றார்

அன்னைமடி
தவளும்
ஆதிதமிழன்
தாயென்றார்

அன்னிய
சதிசெயலால் அறுத்தாண்டான்
வேரென்றார்

தமிழ்தாய் குழந்தைகளாம் தமிழர்கள்
நாமென்றார் இமிழ்தினும் இணைபிரியா
இதிகாச
உறவென்றார்

பிரிந்ததால்
பங்கு கேட்டு படையெடுத்து குவிந்தனர்
உரிமைநாட்டை கூறுபோட்டு
உயிர்ப்பலி
தந்தனர்

பிரிந்தாலும் உறவிருந்தால் பகைவன்
பயந்திருப்பான்
உரிமையில்லா உதறியதால்
உறவையே
அறுத்தெறிந்தான்

ஈழதீவு
தீபகற்பம்
இந்தியா
தாய்சிசுவே
ஆழப்பிறந்த மறத்தமிழன்
ஆட்சிசதியால்
வீழ்ச்சி கண்டோம்

இணைப்புகொடி அறுத்தாலும்
இரத்தம்
ஒன்றன்றோ அணைப்பதற்கு
கரம்துடிக்கும்
ஆதரவு உறவன்றோ

தமிழனென்று
ஈழத்தில்
தரத்தில்
தாழ்த்தினர்
இமிழுவர் சிலோனென்று சிறையைவிட்டு
மீட்பீரோ

அறுத்தெறிந்தனர் அனாதையாய்
அழித்து
குவித்தார்கள்
வெறுத்து
தஞ்சமானோம் வேதனை
தீர்ப்பீரோ

எழுபத்து
ஆறிலும்
எண்பத்து
ஆறிலும் எழுச்சிகொண்டு
எரித்தே
குவித்தனர்

தொண்ணூறில்
துரத்தியதும் தொலைத்தேன் நாட்டையே

எண்ணத்தில்
தாய்நாடு
ஏறினேன்
தமிழ்நாட்டிற்கு

இரண்டாயிரத் தொன்பதில்
இழந்தனர்
உறவுகளை

இரக்கமற்று
பாலகனின்
இதயத்தில்
துளையிட்டு

கருப்புஜூலை கலவரத்தில்
கருகியது
மொட்டுக்கள்

உருவமுண்டு உறுப்பில்லை
உயிர்கள்
மட்டும்
வித்துக்கள்

கேட்பதற்கு
உறவில்லை கொடுத்தொழிந்தோம் உயிர்களை

மீட்பதற்கு வருவீரோ மீழ்குடி தருவீரோ

உயிர்காத்த
தாய்நாடே
உறவாக
ஏற்றருளும்

உயிர்வாழும்
இடத்தனில்
உரிமையும்
தந்தருளும்

அயலவன்
கையிலே
அனாதையாய் கொடுப்பீரோ

புயலென
விரைந்து
பாலத்தை
இணைப்பீரோ

முள்ளிவாய்க்கால் படுகொலை
முள்வேலி அடைப்பினால்

அள்ளி
கொடுத்தோம்
அத்தனை
உயிர்களை

அரறுந்து கிடக்கின்றோம் அண்டை
தேசங்களில்

உறுதிமொழி
தருவீரோ
உறவுகளை
காப்பீரோ

அணைந்த
தீபங்கள்
அண்டை
உறவுகள்

இணைந்த
கரம்கொண்டு இணைக்க
வருவீரோ

இனத்தாலும் மொழியாலும்
இந்திய
வம்சாவளி

மனத்தாலும்
மதியாலும்
மறுமலர்ச்சி
மக்களாட்சி

அறுந்த
உறவுகளை அரவணைக்க
வருவீரோ

மறுப்புசட்டம்
நீக்கி
மறுவாழ்வு
தருவீரோ

இணைப்புகொடி
அறுந்தாலும்
இரத்தம்
ஒன்றன்றோ

அணைப்பதற்கு
கரம்துடிக்கும்
ஆதரவு
உறவன்றோ

இழப்பதற்கு ஒன்றுமில்லை இழந்துவிட்டோம் அனைத்தையுமே குழப்பத்திற்கு
தீர்வென்றால் குடியுரிமை
ஒன்றேதான்

🙏🏻🙏🏻🙏🏻 நன்றி 🙏🏻🙏🏻🙏

கலாதேவி MA BED FNA (ஆசிரியர் )
பத்மநாதன் BBM

ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாம் பரமத்தி