சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு – காலம்
காலம் ஒருநாள் மாறும் என்றே காத்திருந்த உள்ளம் இன்றும் ஓட்டை கூடு
காலம் காலமாய் பார்த்திருந்த கண்கள் இன்று பூத்திருக்கு வாசம் அற்று
காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம் கனவின் லட்சியமோ கடைசி வரை மாறாது
காலம் தந்த காயம் மட்டும் மாறாத வடுவாகி மனதோடு உருகியே உறவாடுவது
காலநேரம் வந்திடுமோ கனவுகள் கரைசேர களிமண்ணாய் கரைந்திடுமோ கலைந்த கனவாக
நன்றி வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻
கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா