சந்தம் சிந்தும் கவிதை

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு விவசாய வம்சம்

அன்பாய் பொங்கி வைக்கும்
அப்பாவ காணவில்லை என்னம்மா தாமதம் என்றகுரல் ஒலிக்கவில்லை

ஆண்டாண்டாய் பொங்கிய
அடுப்புக்கல் அடுக்கவில்லை ஆண்டவனாய் வேண்டிய
அம்மையப்பர் ஒன்றாய் இல்லை

முற்றத்தில்
வண்ணக்கோலம் முகமலர்ந்து சிரிக்கவில்லை
வெற்றிடமாய்
வீடுவாசல்
விடியலைத் தரவில்லை

வண்ணஆடை சொந்தங்கள்
வாசலில்
நகைக்கவில்லை எண்ணம்போல்
ஒன்றுகூடி
எழிலுடன் தோற்றமில்லை

விவசாய வம்சமுங்க வீதிபொங்க வைக்கவில்லை அவசியம் வைப்போமுங்க
ஆண்டுஒன்று ஆனதுமே

😭😭😭😭😭😭😭
இப்படிக்கு சந்தம் சிந்தும் சந்திப்பிற்காக கலாதவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா