வியாழன் கவிதை

கரை தெரியுமா உனக்கு

கரை தெரியுமா உனக்கு

கடலுக்கு கரையுண்டு மனதிற்கு கரையில்லை

கடந்தபாதையில் செய்த கடமையும் என்னவோ

விளலுக்கு இறைக்கும் நிலையான கொள்கைகள்

களமாக நின்று கயமமான ஓட்டங்கள்

எங்கே மனிதம் ஏனிந்த ஏமாற்றம்

எந்தவிடத்திலும் நீதிக்கோ பெரும் போராட்டம்

வாழ்வின் பயணம் பாதையும் தெரியாமல்

வதைபட்டு சிதையும் வனிதைகள் எத்தனைபேர்

பதைபதைக்கும் பாவிகள் பருதவிக்கும் சூழ்நிலையில்

கதையெழுதுவார் கண்ணியம் கற்புடமை என்றெல்லாம்

கதாநாயகனை வர்ணிக்கும் அழகிலே மயங்குவார்கள்

கருவைக்கலைக்கும் வாழ்வியலில் வடிக்கும் கண்ணீர்

கலங்கிக் கொள்ளும் காமுகரின் லீலைகள்

கட்டுடல் சீர்குலைய களங்கம் சுமப்பார்கள்
வேலைதேடும் பயணத்தால் வருமே விபரீதங்கள்

கரைகாண வேண்டும் கயமையை அழித்தெறிவதற்கு…