சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

பொதுத் தலைப்பு

அன்பின் ஊற்று

அன்பும் பண்பும் ஆழ்மன ஊற்று
இன்பம் தந்திடும் இனிய வார்த்தை
எழிலாய் இதமாய் ஏற்றிய அன்பும்
விழியில் நீராய் வெளிவரும் ஊற்றாய்
அன்னை அணைப்பில் அன்பு சொரியும்
தன்னை மறந்து தளிர்த்து வளரும்
குருவின் இணைவு குன்றில் ஏற்றும்
அருமை அன்பும் அறத்தின் ஊற்றே

கமலா ஜெபாலன்