சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

ஊக்கம்
ஊக்கம் ஆக்கம் உடையது என்று
தாக்கம் இன்றித் தந்தார் வள்ளுவனார்
நோக்ம் அதுவானால் நானிலத்தில் நன்றாய்த்
தேக்கம் இன்றிச் செல்வராய் வாழ்வோம்

கல்வியும் செல்வமும் காசும் பணமும்
சொல்லும் சுவவையும் சுந்தரத் தமிழும்
வல்லமை வாய்மை நல்லவை நான்கும்
எல்லாம் சேரும் இல்லம் தனிலே

சோம்பல் இல்லா சுதந்திர வாழ்வில்
சாம்பவி வந்து சார்வாள் மனையில்
தாம்வளர தன்னினம் தழைக்கும் எனவே
நாம் வளர்வோம் நானிலம் வளரும்

கமலா ஜெயபாலன்