சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

தண்ணி சுமக்கும் தங்கக்கிளி
&&&&&&&&&&&&@@@@@@&&&&&&&&&&
அத்தை மகளே அன்னக் கிளியே
வத்தைக் குழம்பு வச்சு தாறயா//
தன்னம் தனியா எங்கடி போற
என் தங்கமே ஞனத் தங்கமே//
உந்தன் அழகில் உயிரக் கொடுத்தேன்
வந்து என்னயும் வசியம் பண்ணேன்டி//
தண்ணி சுமக்கும் தங்கக் கிளியே
தாகம் தணிய தண்ணியும் தாயேண்டி//
தண்ணிக் குடத்தைத் தலையில் சுமக்கும்
பெண்ணே உன்னழகில் பொசுங்கிப் பேனேன்டி//
வேகாத வெய்யிலிலே வெண்மணலில் கால்கடுக்க
போகாதே பொன்மணியே என்மனசு ஏங்குதடி//
பொட்டோடு பூவும் புதுச்சேலை வாங்கிவந்து
கட்டிடுவேன் தாலியும் கண்மணியே உந்தனுக்கு//
ஈரேழு மைலுக்கு தண்ணி சுமக்கும்
தாரகையே உந்தனுக்கு என்னையே தந்தேண்டி//