சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

பிறந்தமனை
இதயத்தின் எழில் இன்பத்தின் சுரங்கம்
உதயத்தின் ஊற்று உண்மையின் இருப்பு
வதனத்தின் அழகு வற்றாத அன்பு
பதனிடும் பள்ளி பாசத்தின் உறைவு

துள்ளித் திரிந்தோம் துடிப்பாய் வாழ்ந்தோம்
பள்ளி சென்றோம் பந்தும் ஆடினோம்
அள்ளியும் அனைக்க அன்னையுடன் சுற்றம்
வெள்ளி நிலாவினில் விளையாடிய சுகங்கள்

இறந்த காலம் இனியும் வருமா
மறந்து போக மனமும் இல்லையே
பறந்து வந்தோம் பலதையும் மறந்தோம்
பிறந்த மனையின் பிரசவ வேதனை

ஒன்றிய குடும்பம் ஒவ்வொன்றாய்ப் பிரிய
நின்று நிலைக்க நின்மதி இன்றி
அன்று பட்ட அவல நிலையால்
இன்றும் வாடுதே எங்கள் இதயம்/

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
கமலா ஜெயபாலன்