சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

தென்றலின் குறும்பு
——————————
தொட்டுச் செல்லும் தொடராய் ஓடும்/
பட்டால் மேனியில் பரவசம் படரும்/
கட்டுக்குள் அடங்கா காதலினால் அவள்/
முட்டி மோதுவாள் மூர்கமாய் உலகில்/

புயலாய் பூமியிலே புரட்டிப் போடுவாள்/
இயற்கைச் சீற்றம் எண்ணவும்
முடியுமா/
கடலின் அலையுடன் கலந்து
வீசியே/
கலக்கி அடிப்பாள் கப்பலும்
தடுமாறும்/

உயிரைக் கொடுப்பாள் உயரைப் பறிப்பாள்/
உணர்வுடன் இருப்பாள்
உயிருள்ள வரையும்/
தென்றலின் குறும்பு
தெரிந்தே வாழ்கிறோம்/
நீயும் நானும்
ஒன்றாய் வாழ்வோம்/

வெப்பம் தணிக்கும்
மேனி குளிரும்/
தப்பாமல் உன்சுகம்
தரணிக்கு வேண்டும்/